மின் இதழில் வெளியான கட்டுரைகளின் தொகுப்பு நுால். அனுபவ கருத்துகள், வரலாற்றுத் தேடல்கள், அறிவியல் ஆராய்ச்சிகள், கலை இலக்கிய திறனாய்வுகள், அரசியல் விமர்சனங்களை முன் வைக்கிறது.
சிறுகதை சொல்லும் பாணியில் ஒரு கருவை தாங்கி ஒவ்வொரு கட்டுரையும் அமைந்து இருக்கிறது. உறவின் மகோன்னதத்தை வெளிப்படுத்தும் கட்டுரை, ஒரு கவிதை போல் வடிக்கப்பட்டிருக்கிறது.
பென்சில் சீவும் போது, சிறுவயதில் ஏற்படும் காயத்தையும், வளர்ந்த பின், மிக்ஸி பிளேடு ஏற்படுத்தும் காயத்தையும் ஒப்பிட்டுள்ளது சுவாரசியம் தருகிறது. உடல் அளவு முறை குறித்த விசாரணை புன்னகை பூக்கச் செய்கிறது. வாசிப்பின் போது நகைச்சுவை இயல்பாக இழையோடுகிறது. அழுத்தம், ஆழம் உடைய கட்டுரைகளின் தொகுப்பு நுால்.
– ஊஞ்சல் பிரபு