சித்த மருத்துவம் பற்றி முக்கிய தகவல்களை தொகுத்து தரும் நுால். சிகிச்சை முறைகள் சிறப்புடன் எடுத்துரைக்கப்பட்டுள்ளன.
சித்த மருத்துவம் பரவிய முறை எடுத்துக் கூறப்பட்டு உள்ளது. இந்த மருத்துவ நடைமுறையில் ஒரு பொருளுக்கு பல சொற்கள் இருக்கும் விபரத்தை அட்டவணையாக தருகிறது. சித்தர்கள் கடைப்பிடித்த உணவு முறையும் கூறப்பட்டுள்ளது.
செடி, கொடி தாவரங்களை மருந்துக்கு உரிய அளவில் மட்டுமே பயன்படுத்தியதை எடுத்துரைக்கிறது. உயிரினங்கள் நலன் அடிப்படையில் இந்த மருத்துவ நடைமுறை உருவாக்கியுள்ளதாக கூறுகிறது. பாடல்கள் வழியாக கருத்தை பதிவு செய்துள்ளது கவனிக்க வைக்கிறது. சித்த மருத்துவத்தில் வானியல் முக்கியத்துவம் குறித்தும் விபரம் தரும் நுால்.
– முகில்குமரன்