மின்னிதழில் எழுதிய கட்டுரைகளின் தொகுப்பு நுால். சுவாரசியம் மிக்க, 30 படைப்புகள் சிறப்பாக வாழ்வதற்கு தக்க பாடங்கள் புகட்டுவதாக உள்ளன.
நேரடியாக பார்த்தவை, கேள்விப்பட்டவை, புத்தகங்களில் வாசித்த தகவல்கள் தொகுத்து தரப்பட்டுள்ளன. ஒரு பொருள் குறித்தது என்ற வரையறையின்றி, பல விஷயங்களும் பேசப்பட்டுள்ளன. அது வாசிப்பில் ஆர்வத்தை அதிகரிக்கிறது.
பயணங்களில் கண்டவையும் படைப்புகளாக வந்துள்ளன. தொகுப்பில், ‘எவரெஸ்ட் சிகரம் கண்டேன்’ என்ற ஒரு கட்டுரை உள்ளது. அதில் தரப்பட்டுள்ள தகவல்களுக்கு கணக்கே இல்லை. எவரெஸ்டை சுற்றி இத்தனை விஷயங்கள் இருக்கிறதா என வியக்க வைக்கிறது. அதுபோல் ஒவ்வொரு கட்டுரையிலும் தனிச் சிறப்புகள் நிறைந்துள்ளன. தகவல்களின் தொகுப்பு நுால்.
– மதி