ஞானானந்தகிரி சுவாமிகள் பற்றி எழுதப்பட்டுள்ள நுால். சிறுவனாக ஞானத்தை தேடி யாத்திரை மேற்கொண்டு உபதேசம் பெற்றதை குறிப்பிடுகிறது.
திருக்கோவிலுார் அருகே தியானக்கூடம் அமைத்து, பக்தி நெறியை பரப்பியவர் ஞானானந்தகிரி சுவாமிகள். இமயமலை குகையில் தவம் செய்தது, தமிழகத்தில் வள்ளலார் உருவாக்கிய ஞானசபையில் தங்கியிருந்து ஆன்மிகத்தை உணர்ந்ததை கூறுகிறது.
திருவண்ணாமலையில் ரமண மகரிஷி சந்திப்பும் கூறப்பட்டுள்ளது. ஞானானந்த சுவாமிகளின் 108 உபதேசங்களுக்கு எளிய விளக்கம் அளிக்கப்பட்டு உள்ளது. இதில், ஏட்டறிவு துவங்கி அனுபவ அறிவின் சாரங்களும் தெரிவிக்கப்பட்டுள்ளன. ஆங்காங்கே படங்களும் இணைத்துள்ளது சிறப்பு. ஞானானந்தர் வாழ்வு, உபதேசங்களை தரும் நுால்.
– முகில்குமரன்