நாடகம், சினிமா, சட்டம் என சோ முத்திரை பதித்தாலும், ‘துக்ளக்’ பத்திரிகையில் எழுதியவை, காலத்தால் அழியாமல் நிலைத்துநிற்கும் என போற்றும் நுால்.
சினிமாவில் ஜக்கு பாத்திரத்தில் வந்து மெட்ராஸ் உச்சரிப்பில் இழுத்து, புரட்டி, உருட்டுவதை போல் அதே நடையில், ‘தமிள் பால்டிக்ஸ்’ எழுதி கலக்குவதை குறிப்பிடுகிறது. தேசியக் கட்சிகளின் உண்மை முகத்தைத் தோலுரித்துக் காட்டுவதை குறிப்பிடுகிறது.
காங்கிரசில் கழுதையை நிறுத்தினால் கூட தேர்தலில் வெல்லலாம் என்ற நிலை மாறியதை எடுத்துக்காட்டுகிறது. தி.மு.க., தலைவராக இருந்த கருணாநிதியின் வெற்றிக்காக உழைத்ததை குறிப்பிடுகிறது. தமிழக அரசியல் கட்சி, தலைவர்களை நையாண்டி செய்து விமர்சிக்கும் நுால்.
– முனைவர் மா.கி.ரமணன்