ஏகாதிபத்தியங்களை வீழ்த்தி சுதந்திரம் பெற்ற வியட்நாம் வீர வரலாற்றை விவரிக்கும் நுால்.
போர் முடிந்து பல ஆண்டுகளான போதும் வியட்நாம் முழுமையாக மீளவில்லை; மக்கள் வாழ்க்கை வலி மிகுந்ததாக இருப்பதை விவரிக்கிறது. வியட்நாமை அடிமையாக்க எடுத்த முயற்சிகளை தோலுரிக்கிறது. இலவச கல்வி, மருத்துவம் வழங்கும் காரணத்தை எடுத்துரைக்கிறது. இயற்கையை நேசிப்பது, பாலின சமத்துவம், பெண்களின் சுதந்திரம் என மகத்துவத்தை பகிர்கிறது.
படகில் வெளியேறிய அகதிகள் இறப்பு, இன்னல், சோக நிகழ்வை கூறுகிறது. படையில் பெண்களின் பங்கை தியாகத்துடன் கூறுகிறது. போரில் பயன்படுத்தப்பட்ட வேதிப்பொருளால் பாதிக்கப்பட்ட குழந்தைகளின் கோர முகத்தைக் காட்டும் நுால்.
– டி.எஸ்.ராயன்