சங்க இலக்கிய நுாலான புறநானுாறு உரையுடன் பதிப்பிக்கப்பட்டுள்ளது.
பண்டைய இலக்கியத்தில் புறத்திணை செயல்பாட்டை கூறுகிறது. இதை பாடியவர்கள் பற்றி வரலாற்று ரீதியான தகவல்கள் தரப்பட்டுள்ளன. மூல பாடத்தில் உள்ள அக்கால சொல்லாட்சி, நடையமைப்பு கூறப்பட்டுள்ளது. கடின நடையுள்ள பாடல்களுக்கு எளிமையாக உரை தரப்பட்டுள்ளது.
எளிதில் படித்து விளக்கும் வகையில், சொற்களை பிரித்து தெளிவுடன் பதிப்பிக்கப்பட்டுள்ளது. அருஞ்சொற்களுக்கு தக்க பொருளும் தரப்பட்டுள்ளன. பாடல்களில் பொதிந்துள்ள முக்கிய செய்தி, வரலாற்று குறிப்புகள் சுட்டிக்காட்டப்பட்டுள்ளன. பாடியோர், பாடப்பட்டோர் வரலாறும் கூறப்பட்டுள்ளது. எளிய உரையுடன் தமிழரின் பெருமையை பேசும் சங்க இலக்கிய நுால்.
– மதி