‘தினமலர்’ வாரமலர் இதழில் தொடராக வாசகர்களின் அமோக வரவேற்பை பெற்ற நாவல் நுால். பிரபல இதழாளர் அந்துமணியின் அசத்தலான முன்னுரையுடன் புத்தகமாக்கப்பட்டுள்ளது. ஒவ்வொரு அத்தியாயத்திலும் புதுக்கவிதைகளை முத்தாய்ப்பான முகப்பாக கொண்டு இளமையுடன் உள்ளது.
குற்றங்களை மன்னிக்கும் பெருந்தன்மையுள்ள இரண்டு பெண் கதாபாத்திரங்களின் அளவில்லா நேசத்தை மையமாக சுற்றி படர்ந்து கவர்கிறது. இவர்களுக்கு மத்தியில் ஒரு ஆணின் தவிப்பை மையமாக கொண்டுள்ளது. எதிர்பாராத திருப்பங்களுடன் எளிய நடையில் அமைந்து, வாசிப்புக்கு விறுவிறுப்பூட்டுகிறது.
மிகைப்படுத்துதல் இல்லாமல் சம்பவங்கள் சொல்லப்பட்டுள்ளன. இதில் வரும் கதாபாத்திரங்களின் செயல்பாடுகள் அன்றாடம் சந்திக்க நேரலாம். அழகிய காதலை சொல்லும் கதை நுால்.
– ராம்