அண்டை நாடான வங்கதேசம் உருவான வரலாறை நாவல் நடையில் ஏராளமான சரித்திரத் தகவல்களுடன் எளிய நடையில் விளக்கும் நுால்.
வங்க தேசத்தில் ஷேக் முஜிபுர் ரஹ்மானுக்கு இந்துக்கள் ஏகோபித்த ஆதரவு இருந்துள்ளதை அறியத் தருகிறது. இந்திய உதவியால், வங்கதேசம் உருவான வரலாறு விரிவாகச் சொல்லப்பட்டுள்ளது.
ஷேக் முஜிபுர் ரஹ்மான் குடும்பம் படுகொலை செய்யப்பட்ட பின் ஏற்பட்ட அதிரடி மாற்றங்கள் ஒன்று விடாமல் விறு விறு நடையில் செல்கிறது. இந்தியா போரில் ஈடுபட வேண்டிய நிர்பந்தம் பற்றியும் கூறப்பட்டு உள்ளது. வேகம், விவேகத்தை கவனத்தில் கொண்டு, போர் புரிந்து வங்கதேசத்தை உருவாக்கியதை விளக்குகிறது. வங்கதேசம் என்ற நாடு உருவானதை தெளிவாக உரைக்கும் புத்தகம்.
– டாக்டர் கார்முகிலோன்