சின்னஞ்சிறு கதைகள் அடங்கிய நுால். வித்தியாசமான முடிவுகளுடன் உள்ளது.
விடிஞ்சா வாக்குப்பதிவு என்பது முதல் கதை. பெரும்பாலான கட்சிகள் முதல்நாள் இரவுதான், மக்களை பணத்துடன் சந்திக்கின்றன. காசு கொடுக்காதவருக்கே ஓட்டு போடுவதாக குடும்பத்தில் உள்ளோர் முடிவு செய்வதை சித்தரிக்கிறது. இருபாலரும் படிக்கும் பள்ளி செய்யும் அற்புதங்களை மற்றொரு சிறுகதை விவரிக்கிறது.
கல்வி, பணம் சம்பாதிக்க பயன்படும் கருவி இல்லை; பணத்தை கட்டிக் காக்க உதவும் கருவி என்ற போதனையும் உண்டு. பக்கத்து வீட்டுக்காரன் வயிறு எரிய, விருந்து சாப்பாட்டுடன் உரையாடல், ‘பேஷ்’ போட வைக்கிறது. என்ன வேலை செய்ய முடியுமோ அதைத்தான் செய்ய வேண்டும் என்பது போன்ற படிப்பினைகள் தரும் நுால்.
– சீத்தலைச் சாத்தன்