இல்லற வாழ்விற்கு இனிமை சேர்க்க, நன்னெறி வகைகளை நயம்படக் கூறும் நுால். இல்வாழ்க்கை அன்பின் அடிப்படையில்கட்டப்படும் கோட்டை. எதிர்பார்ப்பு இல்லாத அன்பையே குறிக்கோளாகக் கொள்ள வேண்டும். போட்டி இருக்கலாம், ஆனால் பொறாமை கூடாது என நிறைய உதாரணங்களைக் காட்டி விளக்குகிறது.
கணவன் மனைவிக்கு இடையே ஒளிவு மறைவு இருக்கவே கூடாது. அமைதியை அது குலைத்து விடும் என்று எச்சரிக்கின்றது. மது, மாது, சூது இம்மூன்றும் வாழ்க்கையை சீரழித்து விடும் என்கிறது. எந்த முடிவும் இருவரும் பேசியே எடுக்க வேண்டும் என விரிவாக விளக்குகிறது.
எளிய நடையில், அரிய தகவல்களை தருகிறது. புதுமணத் தம்பதியருக்கு பொக்கிஷமாக அமைந்துள்ள நுால்.
– டாக்டர் கார்முகிலோன்