பூரண ஞான நிலையான ‘போதி’யை அடைவதற்கு துணை போகும் கருத்துகள் நிறைந்த நுால்.
அற்புதங்களும், மகிமையும் உயர்வை தரக்கூடியது அல்ல என சீடர்களுக்கு, புத்தர் போதித்ததை கூறுகிறது. துக்கம், துன்பத்திலிருந்து விடுதலை பெறும் வழி வகைகள் சொல்லப்பட்டுள்ளன. அமானுஷ்ய சக்தியை மறுக்கிறது.
பழுதற்ற வாழ்க்கைக்கான அஷ்டாங்க மார்க்கம், வாய்மை, தானத்தின் நோக்கம், தியான யோகியின் பரவச நிலை, பொறி புலனடக்கம், பரிநிர்வாணம் பற்றி விவரிக்கப்பட்டுள்ளது.
மணிமேகலை, வீரசோழியத்தில் மேற்கோள்கள் எடுத்தாளப்பட்டுள்ளன. புத்த சமய கருத்து நுால்.
– புலவர் சு.மதியழகன்