எண்களின் விசித்திரமான பண்புகள், கணிதத்தின் சுவாரஸ்யமான விஷயங்கள், வியூகங்களை விளக்கமாக பகுப்பாய்வு செய்து தொகுக்கப்பட்டுள்ள நுால்.
கணிதத்துடன் உள்ள உணர்வை ஊக்குவிக்கும் விதமான அணுகுமுறை, எண்களின் ஆழமான உறவுகளை விளக்கும் தகவல்கள் நிறைந்துள்ளன. மாணவர்களுக்கும், ஆராய்ச்சியாளர்களுக்கும் பயனளிக்கும் கணிதம் சம்பந்தமான பல்வேறு துறைகள் பற்றியும் கூறப்பட்டுள்ளது.
தொகுப்பு எளிமையாக எழுதப்பட்டுள்ளது. அனைத்து வாசகர்களும் புரிந்துகொள்ளும் வகையில் உள்ளது. கணித ஆர்வலர்களுக்கு மட்டும் அல்லாமல், கணக்கு போடுவது சுவாரஸ்யமானது என்று உணர விரும்புவோருக்கும் சிறந்த படைப்பாக மலர்ந்துள்ளது.
கணிதம் என்றால் கூட்டல், கழித்தல், பெருக்கல், வகுத்தல் என்ற தளத்தில் நின்றுவிடாது, அதற்கும் மேல் அறிவியல் துறைகளில் அதன் பயன்பாடு எப்படி விரிந்து உள்ளது என்பதை அற்புதமாக விளக்குகிறது.
கணிதத்தில் புதுமையான அணுகுமுறை, மாணவர்களுக்கு பயனளிக்கும் விளக்கங்கள், அறிவியல் மற்றும் கணித ஆர்வலர்களுக்கு பயன்படும் விஷயங்கள், தோழமை எண்கள், உறுதி எண்கள் போன்ற பொருண்மைகளில் தலைப்புகள் உள்ளன. கணித அறிஞர்கள் மட்டுமின்றி, சாதாரண வாசகர்களும் விரும்பும் விதமாக எழுதப்பட்டு இருக்கிறது.
கணிதத்தில் ஆழமான புரிதலை ஏற்படுத்தும் புதுமையான தொகுப்பாக மலர்ந்துள்ளது. மாணவர்கள், ஆசிரியர்கள், கணித ஆராய்ச்சியாளர்கள், பொது வாசகர்கள் என அனைவருக்கும் பயன் தருவதாக அமைந்துள்ளது. கணிதம் குறித்த பார்வையை மாற்றும் புத்தகம்!
– இளங்கோவன்