பொது அறிவை வளர்க்கும் புத்தகம். தமிழக மற்றும் மத்திய அரசுகளின் வரவு –- செலவு திட்ட அறிக்கைகள் குறித்த அலசல் தனித்துவமாக இடம் பெற்றுள்ளது.
அறிவியல் தொழில்நுட்ப வளர்ச்சி, தமிழக மற்றும் மத்திய அரசுகள் நிறைவேற்றும் திட்டங்கள் குறித்த விபரங்கள் தரப்பட்டுள்ளன. உலகம் மற்றும் தேசிய அளவில் வழங்கப்படும் விருதுகள் குறித்து சிறப்பு கட்டுரைகள் சேர்க்கப்பட்டுள்ளன. கடந்த ஆண்டின் முக்கிய நிகழ்வுகள் தொகுத்து தரப்பட்டுள்ளன.
தமிழகம், இந்தியா, உலக அளவிலான முக்கிய நிகழ்வுகளும், செய்திகளும், விளையாட்டுகள் பற்றிய தகவல்களும் இடம் பெற்றுள்ளன. வரலாற்று முக்கியத்துவம் உள்ள விசாரணை அறிக்கைகளும் உள்ளன. உலக அளவில் தகவல்கள் தந்துள்ளது. பொது அறிவை வளர்க்க உதவும் புத்தகம்.
– ராம்