சமூக அவலங்களை போக்க வழி காட்டும் சிந்தனைகள் உடைய நுால். காதலர் தினம் தேவையே இல்லை என்று அழுத்தமாக தெரிவிக்கிறது.
ஆசையற்ற மனமும், விரோதம் அற்ற மனிதமும், வியாதி அற்ற உடலும் சாத்தியம் இல்லை என்பது போன்ற கருத்துகள் விரவிக் கிடக்கின்றன. ஆசை என்ற அளவுகோலை தாண்டினால் பேராசை வரும். அப்போது, வாழ்க்கை நேர்மைக் கோட்டை தாண்ட நேரிடும் என்பது நல்ல கருத்து.
காதல் திருமணத்தில் பெற்றோர் ஒத்து போக வேண்டும் அல்லது ஒதுங்கி போக வேண்டியது காலத்தின் கட்டாயம்.சமூகம் சுமுகமாக இருக்க இந்த இரண்டில் ஒன்று உதவும் என்கிறது. திருமண அழைப்பு அலைபேசியில் வருவதால் பந்தம் குறைவதாக ஆதங்கப்படுகிறது. சுவையான தகவல்கள் நிறைந்த தொகுப்பு நுால்.
– சீத்தலைச்சாத்தன்