அன்றாட வாழ்வு பிரச்னைகளுடன் சம்பந்தப்படுத்தி பார்க்கும் வகையில் அமைந்த சிறுகதைகளின் தொகுப்பு நுால். தெளிந்த நீரோடை போல் எளிய நடையில் அமைந்து, எதிர்பாராத திருப்பங்களுடன் வாசிப்புக்கு ஏற்ற வகையில் உள்ளது.
தொகுப்பில், 23 கதைகள் உள்ளன. ஒவ்வொன்றும் கண் முன் நடக்கும் நிகழ்வுகளை தொடர்புபடுத்தும் வகையில் அமைந்துள்ளன. எதையும் சுற்றி வளைக்காமல் நேரடியாக சொல்லப்பட்டுள்ளது. மனதை தொடும் வகையில் கதை முடிவுகள் அமைந்துள்ளன.
முதல் கதையான கடல் கோழிகள், ஏமாற்றம் என்பது நிரந்தமல்ல; அதை தீர்த்துவிட முடியும் என நம்பிக்கையை ஊட்டுகிறது. சுவைபட உருவாக்கப்பட்ட கதாபாத்திரங்கள் கவர்கின்றன. குடும்பம், பணித்தளம் என வாழ்வை பேலன்ஸ் செய்ய வழிகாட்டும் நுால்.
– மதி