பழகு தமிழில் அறிவியல் தொழில்நுட்பக் கருத்துகளை தரும் நுால். மாணவர்களுக்கு பாடம் நடத்துவது போல் எளிய நடையில் சொல்லப்பட்டு உள்ளது.
அன்றாடம் பயன்படுத்தும் டிஜிட்டல் கருவிகள், அறிவியல் தொழில்நுட்பத்தின் அருங்கொடைகளாக உள்ளன. இரண்டு மணி நேரம் பார்த்து ரசிக்கும் சினிமா என்ற கலையின் பின்னணியில் சுவாரசியங்கள் நிறைந்துஉள்ளன. அவற்றை சுவைபட தருகிறது இந்த புத்தகம்.
அரிய பொது அறிவு தகவல்களால் நிரம்பியுள்ளது. அறிவியல் தொழில் நுட்பத்தை சிக்கலின்றி புரிய வைக்கிறது. சரியான உதாரணங்கள் வழியாக விளக்குகிறது. புவி வெப்பமயமாகும் நிகழ்வை எவரும் புரிந்து கொள்ளும் வகையில் முன் வைக்கிறது. அறிவியல் தொழில் நுட்ப பயன்பாட்டை எளிய நடையில் தரும் நுால்.
– ஒளி