கோவில் வழிபாட்டில் இசையும், நாட்டியமும் இன்றியமையாத அங்கங்களாக இருந்ததை எடுத்துரைக்கும் நுால். பதினொரு வகை ஆடல்கள் பற்றிய விளக்கமும், கூத்து வகைகள் குறித்த தகவல்களும் விரிவாகச் சொல்லப்பட்டுள்ளன.
சின்ன மேளம், பெரிய மேளம் பற்றியும் தெரிந்து கொள்ளலாம். சிலப்பதிகார தகவல்கள் களஞ்சியமாய் நிறைந்துள்ளன. நடனம் கற்பிக்கும் முறை பற்றிய விளக்கம், ஆடல் மகளிருக்கான தகுதிகள், வாய்ப்பாட்டு பற்றி விரித்துரைக்கிறது.
பக்கவாத்தியக்காரர் என்னென்ன தகுதிகள் கொண்டிருக்க வேண்டும், அரங்க அமைப்பு, அரங்கேற்ற முறை என நுட்பமான தகவல்கள் வியக்க வைக்கின்றன. உரைநடை தமிழில் நாட்டிய புத்தகங்களின் பட்டியலை தருகிறது. தமிழகத்தின் முக்கிய கலைப் பொக்கிஷ நுால்.
– டாக்டர் கார்முகிலோன்