ஆறுகள் பற்றிய அடிப்படை தகவல்களை உள்ளடக்கிய நுால். நாட்டை வளப்படுத்துவதில் முதன்மை பங்காற்றுவதை தெளிவாக எடுத்துரைக்கிறது.
பூமியில் ஆறுகள் உருவாகும் விதம் பற்றிய பொதுவான தகவல்கள் முதல் பகுதியில் தொகுத்து தரப்பட்டுள்ளன. தொடர்ந்து இலக்கியத்தில் ஆறுகள் பற்றிய குறிப்புகளை அறியத் தருகிறது. ஆறுகளின் வகை பற்றியும் குறிப்பிடுகிறது.
உலகின் மிக நீண்ட துாரம் பாயும் ஆறுகளின் பின்னணியில் உள்ள ஆச்சரிய விபரங்கள் உள்ளன. நதிக்கரை நாகரிகம், தொன்மக் கதைகள் மற்றும் வரலாற்றுக் குறிப்புகள் தொகுத்து கூறப்பட்டுள்ளன. தமிழகத்தில் பாயும் ஆறுகள், கட்டப்பட்டுள்ள அணைகள் மற்றும் வரலாற்று சிறப்புகள் பற்றிய புள்ளி விபரங்கள் கூறப்பட்டுள்ளன. புவியியல் ரீதியாக அறிவு தரும் நுால்.
– ராம்