தேவாரப் பதிகங்களில் தேர்வு செய்த பொக்கிஷங்களை தொகுத்து தரும் நுால். பாடல் பெற்ற தலங்கள், அதிகமான பதிகங்கள் பெற்ற தலங்கள், இருவர் இணைந்து பாடிய தலங்கள், ஒருவர் மட்டுமே பாடியவை என விபரப் பட்டியலை தந்துள்ளது.
சம்பந்தர், அப்பர், சுந்தரர் வாழ்க்கைக் குறிப்புகள் பெருமை சேர்க்கின்றன. இவர்களை ஈசன் ஆட்கொண்ட விதமும், தேவாரம் பாடிட, தானே அடி எடுத்துக் கொடுத்த தன்மையும் உள்ளத்தை உருக்குகின்றன.
பாடல் பெற்ற தலத்தின் பெயர், பதிகம் அமைந்து உள்ள ராகம் போன்ற தகவல்களும் உள்ளன. இவற்றில் நிகழ்த்திய அதிசயச் சம்பவங்களும் குறிப்பிடப்பட்டுள்ளன. முழு நம்பிக்கையோடு பக்தி மேலோங்கும் வகையில் பதிகங்களைப் பாட ஒவ்வொரு இல்லத்திலும் இருக்க வேண்டிய நுால்.
– டாக்டர் கார்முகிலோன்