எரிமலைகள் குறித்த தொகுப்பு நுால். எந்த மலை வெடிக்கும்; எது வெடிக்காது போன்ற அபூர்வ தகவல்களை கொண்டுள்ளது.
உலகின் மிகப்பெரிய ரகசியமாக மனிதனின் அறிவுக்கு எட்டாதிருந்த இயற்கை செயல்பாடு எரிமலை. அது குறித்த அறிவியல் ரீதியான செய்திகளை தொகுத்து விரிவாக தருகிறது. வரலாற்றில் எரிமலை வெடிப்புகள் குறித்து உரைக்கிறது.
புவியியல் ரீதியாக எரிமலை ஏற்படுத்தும் வியப்புகளுக்கு விடை இந்த புத்தகம் முழுதும் விரிவாக உள்ளது. ராட்சத எரிமலை என அழைக்கப்படும் வெடிப்பு, 1,000 சதுர கி.மீ., வரை இருக்கும் என்பது போன்ற தகவல்கள் உள்ளன. வெந்நீரூற்று எப்படி உருவாகிறது என்பதையும் விவரிக்கிறது. உலகின் பல பகுதி எரிமலை குறித்த விபரங்களையும் அறிய தரும் நுால்.
– ராம்