நவீன உலகத்திற்கு ஏற்ப தகவல் சொல்லும் நுால். மின்னஞ்சலில் மடல் எழுதுவது போல் அமைக்கப்பட்டுள்ளது.
மலை மீது கோவில்கள் கட்டப்படுவது ஏன் என்று ஒரு கேள்வி. அதற்கு, ‘மலை ஏறுவது உடலுக்கு நல்லது. உடல் வளமை பெறும். மலையில் வீசும் காற்று உடலையும், உள்ளத்தையும் குளிரச் செய்யும். இறைவன் எல்லாவற்றிற்கும் உயரமானவன் என்பதை உணர்த்தும்’ என்ற விளக்கமான பதில் தரப்பட்டு உள்ளது. பிரபல விஞ்ஞானி ஸ்டீபன் ஹாக்கிங் சுருக்க வரலாறும் உள்ளது.
தகப்பனாருக்கு ஒரு மின்னஞ்சல், அனுப்பப்படுகிறது. அதில், ‘திருமணப் பொருத்தம் பார்ப்போர் வயது, படிப்பு, தோற்றம், குண நலன்கள் ஒத்துப் போகிறதா என்பதை மட்டுமே தேட வேண்டும்’ என்கிறது. அதிசயிக்க வைக்கும் நுால்.
– சீத்தலைச் சாத்தன்