பெண்களை முன்னேற்றும் சிந்தனையுள்ள சிறுகதைகளின் தொகுப்பு நுால். கூர்மையான சமூக பார்வையில் அமைந்த 18 கதைகள் இடம்பெற்றுள்ளன.
இந்த தொகுப்பில் இடம்பெற்றுள்ள கதாபாத்திரங்கள், பாரதியின் புதுமைப்பெண்களை நினைவூட்டுகின்றன. தம்மைச் சுற்றியுள்ள வேலியை தகர்க்கும் அதே நேரம், பண்பாடுகளை மீறாத வகையில் அமைக்கப்பட்டுள்ளது. சுயத்தை இழக்காமல் வாழ்க்கையை அமைத்துக் கொள்வது பற்றியே பேசப்பட்டுள்ளது.
பெண் சுதந்திரம் முதலில் குடும்பத்தில் இருந்தே துவங்க வேண்டும் என்பதை வலியுறுத்துகின்றன கதைகள். ஒவ்வொரு கதாபாத்திரமும் பல்வேறு தெளிவுகளை ஏற்படுத்துகின்றன. வழிகாட்டுதல் கிடைக்காத இளம்பெண்களுக்கு ஏற்படும் குழப்பத்தையும் எடுத்துரைக்கிறது. தீர்க்கமான சிந்தனையை முன்வைக்கும் நுால்.
– மதி