தமிழகத்தில் பாயும் ஆறுகள் பற்றி அறியத்தரும் நுால். தண்ணீர் பற்றிய விழிப்புணர்வை ஊட்டும் வகையில் உருவாக்கப்பட்டுள்ளது. தமிழகத்தில் ஆறுகள் எதிர் நோக்கியிருக்கும் பிரச்னையும் சுட்டிக்காட்டப்பட்டுள்ளது.
தமிழகத்தில், 100 ஆறுகளை அறிமுகம் செய்கிறது. அவற்றுக்கு ஏற்பட்டுள்ள பிரச்னைகளை முன்வைத்து தீர்வை வலியுறுத்துகிறது. முக்கியமாக, ஆற்றுப் பகுதிகளுக்கு நீர் கொண்டு வரும் கால்வாய்களில் உள்ள ஆக்கிரமிப்புகளை அலசுகிறது.
நீர்நிலைப்பகுதிகள் வீட்டு மனைகளாக மாறும் போக்கை கவலையுடன் கவனப்படுத்துகிறது. தொழிற்சாலைக்கழிவை சுத்திகரிக்காமல் ஆற்றில் விடுவதால் ஏற்படும் பாதிப்பு பற்றியும் பேசுகிறது. நகரமயமாதலில் பாழாகியுள்ள ஆறுகளின் நிலை குறித்தும் கூறும் நுால்.
– ஒளி