தமிழக முதல்வராக பொறுப்பு வகித்த காமராஜர் வாழ்க்கை பற்றிய நுால். ஆடம்பரம், புகழ்ச்சி, விளம்பரமற்று வாழ்ந்ததைக் காட்டுகிறது. வளர்ச்சியில் மற்ற மாநிலங்களுக்கு முன்னோடியாக தமிழகம் திகழ்ந்ததை சுட்டிக்காட்டுகிறது.
நாடிவரும் ஏழை எளியோர், தியாகிகளுக்கு உதவியது குறித்து கூறப்பட்டுள்ளது. காங்கிரசை கடுமையாக விமர்சித்தோருக்கும் அமைச்சர் பதவி தந்த பெருந்தன்மையை விவரிக்கிறது. ஆட்சியில் கல்வி, தொழில், வேளாண் புரட்சி முன்னெடுக்கப்பட்டதை தெளிவாக்குகிறது.
இலவசக்கல்வி, 60 வயதுக்கு மேற்பட்டோருக்கு பென்ஷன் தொகை, ஏழ்மை மாணவர்களுக்கு கல்வி உதவித்தொகை வழங்கப்பட்டது போன்ற நலத்திட்டங்கள் பட்டியலிடப்பட்டுள்ளன. காமராஜரின் எளிய வாழ்வை அறியத்தரும் நுால்.
– புலவர் சு.மதியழகன்