முதியோர் – இளைஞர் இடையே நல்லிணக்கம் ஏற்படுத்தும் கருத்துகளை உடைய நுால். முதியோர் தங்களை அறிந்து செயல்பட ஏற்ற வகையில் எழுதப்பட்டுள்ளது.
புத்தகத்தில் அனுபவக் கதைகளின் வெளிப்பாடு மிகவும் உணர்வு ரீதியாக உள்ளது. முதியோருடன் பிணைப்பு ஏற்படுத்தும் வகையில் உள்ளது. குடும்பங்களில் தற்போதைய உறவு நிலையை அப்பட்டமாக படம் பிடித்துக் காட்டுகிறது. முரண்பாடுகளை ஒவ்வொன்றாக ஆராய்ந்து, தீர்க்கும் வழிமுறைகள் சொல்லப்பட்டுள்ளன.
புத்தகத்தில் தரப்பட்டுள்ள துணைத் தலைப்புகளே, சாராம்சத்தை வெளிப்படுத்துகின்றன. ‘என்னால் முடியும்’ என்ற தலைப்பில் சொல்லப்பட்டுள்ள தகவல்கள் நம்பிக்கையை ஏற்படுத்தும். குடும்பங்களில் முதியோர் பிரச்னைகளை தீர்க்க வழிகாட்டும் நுால்.
– ஒளி