புராண பின்னணியுடன் மர்மங்கள் நிறைந்த நாவல் நுால்.
ஒரு புதையலை கண்டுபிடிக்கும் முயற்சியில் நிலவும் மர்மம், அதை சூழ்ந்துள்ள ரகசியங்கள், தொன்மை சம்பவங்கள், தெய்வீக மற்றும் வரலாற்றுச் செய்திகளை ஒருங்கிணைத்து புனையப்பட்டுள்ளது. பழைய பேரரசுகளின் தொன்மை நம்பிக்கையை சுவாரஸ்யம் குன்றாமல் அளிக்கிறது. கதாபாத்திரங்கள் கவனித்து உருவாக்கப்பட்டுள்ளன.
கதை உளவியல் அனுபவங்களை தெளிவாக உணர வைக்கிறது. கதையின் பின்னணியில் வரலாற்று விபரங்கள் தொகுக்கப்பட்டுள்ளன. அடுத்து என்ன நடக்கும் என்ற ஆவலை ஏற்படுத்துகிறது. திரில்லர் எழுத்து முறை வாசகர்களை கவரும். ஆன்மிகம், வரலாறை ரசிக்க விரும்புவோர் வாசிக்கலாம்.
– இளங்கோவன்