உணவு இல்லாமல் உயிரினங்கள் வாழ முடியாது என்பதை உணர்த்தும் கதைகளின் தொகுப்பு நுால்.
உணவை தேடும் போராட்டமே விலங்கு, பறவைகளின் வாழ்க்கை முறை; அதற்காகவே இடம் பெயர்கின்றன. இத்தகைய உயிரினங்களில் மணிகாக்கையும், கிளியும் காட்டில் நண்பராக வலம் வருவதை சுற்றி பின்னப்பட்டுள்ளன. விலங்குகள் உதவுவது போலவும், அறிவுரை தருவது போலவும் அமைக்கப்பட்டுள்ளது.
வேறுபட்ட குணாதிசயங்கள் உடைய சிங்கம், சிறுத்தை, புலி, மான், யானை, கிளி போன்றவை காக்கைக்கு உதவி செய்து அன்புடன் வாழ்வதாக சித்தரிக்கப்பட்டுள்ளது. எவ்வுயிரினத்தையும் தன் உயிர் போல் மதித்து போற்றி வாழவும், நற்குணங்களை பின்பற்றவும் வழிகாட்டுகிறது. வாழ்வை அர்த்தமுள்ளதாக்கும் நுால்.
– புலவர் சு.மதியழகன்