விஷ்ணு பெயர்களின் சிறப்பை விளக்கும் நுால். பராசரபட்டர் கூறிய விளக்கவுரையின்படி பொருள் தரப்பட்டுள்ளது. பரம், வியூகம், விபவம், அர்ச்சாவதாரம், அந்தர்யாமி என விஷ்ணுவின் நிலைகள் விளக்கப்பட்டுள்ளன. எங்கும் வியாபித்து முக்காலங்களின் தலைவனாக இருப்பதைக் கூறுகிறது.
பரமாத்மா, பரமபதம் தருபவன், புருஷரில் சிறந்த புருஷோத்தமன், நரசிம்மன், தானே பிறந்த சுயம்பு, சூரியன், நான்முக கமலத்தை நாபியில் கொண்ட பத்மநாபன், சர்வேஸ்வரன், ஜனார்த்தனன், வாமனன், சீனிவாசன் போன்ற பெயர்களுக்கு விளக்கம் தருகிறது.
திவ்ய பிரபந்தம், கம்பராமாயணம், பாகவதத்தில் மேற்கோள்கள் தரப்பட்டுள்ளன. ஆயிரம் விஷ்ணு நாமங்களுக்கும் அர்த்தம் சொல்லும் அற்புத நுால்.
– முனைவர் மா.கி.ரமணன்