கணித மேதை ராமானுஜரின் வாழ்க்கையையும், கணித அறிவையும் விளக்கும் நுால். ஒன்பது தலைப்புகளுடன் நிறைவடைகிறது.
கணக்கு எனக்கு பிணக்கு என்றார் பாரதி. அதே காலத்தில் வாழ்ந்த ராமானுஜரோ கணக்கு உயிர் போன்றது என்று நிரூபித்த வரலாற்றை விவரிக்கிறது. பூஜ்ஜியத்திற்கு மதிப்புண்டு என்று வியக்க வைத்த செய்தியை சொல்கிறது.
சொந்த முயற்சியால் கண்டுபிடித்த கணித சூத்திரங்கள் பலவற்றை மிக விளக்கமாகக் கூறி வியக்க வைக்கிறது. இங்கிலாந்து பயணம் ஒரு திருப்புமுனையாக அமைந்ததை தெரிவிக்கிறது. வருமானத்தில் ஏழைகளின் கல்விக்கு பயன்பட வேண்டும் என்ற சமுதாய வளர்ச்சி எண்ணத்தை தெரிவிக்கிறது. கணித மேதையை பற்றி முழுமையாக அறிந்துகொள்ள உதவும் நுால்.
– புலவர் ரா.நாராயணன்