சுப காரியங்களுக்குரிய வாரங்கள், திதிகள், பனிரெண்டு ராசிகளுக்கு அதிபதிகள், உருவங்கள், நிறங்கள் கூறப்பட்டுள்ள நுால்.
ஒன்பது கிரகங்களின் நிறம், தான்யம், ரத்தினங்கள், உலோகங்கள், திசைகள், அதிதேவதைகள், உச்ச, நீச வீடுகள், நட்பு, பகை வீடுகள் கூறப்பட்டுள்ளன.
கிரகங்களின் அரோஹணம், அவரோஹணம் உள்ளது. நட்சத்திரப் பொருத்தம் விளக்கப்பட்டுள்ளது.
உஷ்ணசிகை தோஷம், திதி விஷம், நட்சத்திரங்களின் அதிபர்கள் பற்றி கூறப்பட்டு உள்ளது. நல்ல முகூர்த்த காலம், செவ்வாய் தோஷம் விளக்கப்பட்டுள்ளது.
பத்து வகை பொருத்தங்களும் விளக்கமாகக் கூறப்பட்டுள்ளது. ஜோதிடம் விரும்புவோருக்கு பயனுள்ள நுால்.
– முனைவர் கலியன் சம்பத்து