அமெரிக்க நாட்டின் அறிவியல் தொழில்நுட்ப வளர்ச்சியை பயண அனுபவம் வழியாக வெளிப்படுத்தும் நுால்.
அமெரிக்க ஐக்கிய நாடுகள் குறித்த சுருக்கமான அறிமுகத்துடன் துவங்குகிறது. தொடர்ந்து அந்த நாட்டின் பல பகுதிகளிலும் பயணம் செய்து, அருங்காட்சியகங்கள், ஆய்வு மையங்களில் ஏற்பட்டுள்ள வளர்ச்சி தொடர்பான தகவல்களை திரட்டி, உரிய படங்களுடன் பதிவு செய்யப்பட்டுள்ளது.
பயணத்தில் இடையிடையே ஏற்பட்ட நிகழ்வு சுவாரசியங்கள் கலகலப்பூட்டுகின்றன. விலங்குகள் மற்றும் தாவர புதை படிவங்கள், ரத்தினக் கற்கள், தாது பொருட்கள், இயற்கை அறிவியல் அருங்காட்சியகங்கள் பற்றி எல்லாம் தெளிவாக உரிய படங்களுடன் தகவல்கள் உள்ளன.
அமெரிக்கர்களின் பிரமாண்ட வளர்ச்சியை கண்முன் நிறுத்தும் பயண நுால்.
– ஒளி