பாரம்பரிய பழக்க வழக்கங்களின் அறிவியல் பின்னணியை ஆய்வு செய்யும் நுால். நடைமுறைகளில் பின்பற்றப்படும் உண்மைகள் என்ன என்பதை விளக்குகிறது.
சம்பிரதாயங்களை அறிவியல் ரீதியாக விளக்கி, பழங்காலத்து நடைமுறைகளுக்கு உள்ளார்ந்த காரணங்கள் இருப்பதை பகிர்கிறது. சமூகத்தில் ஒவ்வொரு பழக்கத்திற்கும் உள்ள அறிவியல் காரணங்களை தெளிவாக விவரிக்கிறது.
சூரிய நமஸ்காரம், திருமணத்தில் அரைக்கோணிக்கால் நடுவது, பூஜையில் தேங்காய் உடைப்பது போன்ற விஷயங்களை விவரிக்கிறது. பாரம்பரிய நம்பிக்கைகளுக்கு பின்னுள்ள விளக்கமாக அமைந்து உள்ளது. பழமையான மரபுகளை அறிவியல் ரீதியில் புரிந்துகொள்ள விரும்புவோருக்கு உதவும் நுால்.
-– இளங்கோவன்