நீர் மேலாண்மையை விளக்கும் நுால்.
நிலத்தடி நீரை வீணாக்காமல் நிர்வகிக்க, நீர் ஆதாரங்களை கட்டுக்குள் வைக்க, நீர் வளத்தைப் பெருக்க வழிமுறைகள் குறித்த மத்திய அரசின் மாதிரி சட்டத்தை விளக்குகிறது. நாட்டின் பல மாநிலங்கள் தண்ணீர் பற்றாக்குறையால் தவித்து வருவதை சுட்டிக்காட்டுகிறது. மணல் கொள்ளையால் காணாமல் போகும் நிலத்தடி நீர் வளம் குறித்து சொல்கிறது.
பண்டைய மன்னர் ஆட்சியில் நீர் நிலை நிர்வாக நிலை பற்றியும் விவரிக்கிறது. தடுப்பணைகள் கட்டிய மனிதர், நதிநீர் இணைப்பு பற்றிய ஆலோசனை, நீர்த்தட்டுப்பாடு, வெள்ளப்பெருக்கு பற்றி குறிப்பிடுகிறது. நீர் மேலாண்மை விழிப்புணர்வை ஏற்படுத்தும் நுால்.
– புலவர் சு.மதியழகன்