ஜோதிடம் பற்றிய தகவல்களை தெரிவிக்கும் நுால். ஜோதிடம் இறைத்தத்துவம் என விளக்குகிறது.
ஜோதிடக்கலை எதிர்கால வாழ்க்கையை வெளிச்சமிட்டு காட்டுவதாக தெரிவிக்கிறது. குருவருளாலும், திருவருளாலும் ஆற்றலைப் பெற்று ஜோதிடர் நாட்டுக்கு உதவுவதாக சொல்கிறது. கணிதம், ஆன்மிகம் சார்ந்த தத்துவம், கருத்துகளை அறிந்துள்ளதாக உரைக்கிறது.
ஜோதிடத்தில் பஞ்சாங்கத்தின் இடம் குறித்து விளக்கம் தருகிறது. குழந்தை பிறந்த நேரம், நாள், நட்சத்திர விளக்கம் உள்ளது. ஜாதகம் கணிக்கும் முறையை விவரிக்கிறது. ஜோதிடம் பற்றிய தகவல்கள் பல முனைகளில் விளக்கிச் சொல்லப்பட்டுள்ளன. ஜோதிடர்களுக்கும், ஜோதிடம் பயில்வோருக்கும் உதவும் வகையில் அமைந்துள்ள நுால்.
– புலவர் ரா.நாராயணன்