கவலையை மறக்க வைக்கும் தத்துவப் பாடல்களின் தொகுப்பாக மலர்ந்துள்ள நுால். கவிஞர் கண்ணதாசன் எழுதிய, 501 கவிதைகள் இடம் பெற்றுள்ளன.
தமிழர் வாழ்வில் பிரிக்க முடியாதது திரைப்பாடல்கள். இதை புனைந்ததில் கவிஞர் கண்ணதாசனுக்கு தனித்த இடம் உண்டு. பிறப்பு, வளர்ப்பு, சடங்கு, திருமணம், உறவு என எல்லா நிகழ்வுகளிலும் தொடர்பை ஏற்படுத்தும்.
தத்துவக் கருத்தை, பாமர மக்களும் புரிந்து கொள்ள ஏதுவாக கவிஞர் கண்ணதாசன் எழுதிய கவிதைகள் இந்த புத்தகத்தில் தொகுத்து தரப்பட்டுள்ளன. வாழ்வில் எதிர்பாராத கவலை சூழும்போது, அதை கடக்க உதவும் வகையில் உள்ளன. அனைத்தும் திரைப்படங்களில் காட்சி பூர்வமாக இடம் பெற்றவை. ரசித்து படிக்க வேண்டிய தத்துவ பாடல்களின் தொகுப்பு நுால்.
– ராம்