திருக்குறளுக்கு உரை நுால் தனித்துவமாக இருக்கிறது.
வள்ளுவர் வாழ்ந்த காலத்து நம்பிக்கைகள், பண்பாடு, பார்வைகளிலிருந்து மாறுபடாமல், வலிந்து திணிக்காமல் மற்றொரு பார்வையை முன் வைக்கிறது. தமிழ்ப் புலமையை காட்டுகிறது. கடவுள் வாழ்த்து அதிகாரத்தை வழிபாடு என்று குறிப்பிடுகிறது.
பெண் வழிச் சேரல் அதிகாரத்தில் பெண்களின் மதிப்பை வியந்து கூறுவது ரசிக்க வைக்கிறது. வளையல் அணிந்த வடிவழகி, பார்க்கும் போது பரிவு கொண்டவள், துவளுகின்ற துடியிடையாள் என்று உரைநடைக்குள் பாநலம் புகுத்தியிருப்பது சிறப்பாக காணப்படுகிறது. ஒவ்வொரு குறளையும் பகுத்து காரணங்களுடன் சுட்டிக்காட்டி, நெறியை எளிமையாக புரியும் வண்ணம் தந்துள்ளது. உரையால் தனித்துள்ள நுால்.
– ஊஞ்சல் பிரபு