நீதிநெறி போதிக்கும் பழந்தமிழ் புத்தக கருத்துகளை எளிதில் புரியும் வண்ணம் பொருளுடன் தரும் நுால்.
அவ்வை தந்த ஆத்திசூடி, பாரதி ஆத்திசூடி, பாரதிதாசன் ஆத்திசூடி என பொருந்தும் நன்னெறிகளை புகட்டுகிறது. உலக நீதியும், வெற்றிவேற்கையும் அற உரைகளுடன் பதிப்பிக்கப்பட்டுள்ளன.
அச்சம் தவிர் என துவங்கும் பாரதியின் ஆத்திசூடி, கவலை கொண்டால் தன்னையே மாய்த்து கொள்வான் என்பதை நொந்தது சாகும் எனத் தொடர்கிறது.
பாரதிதாசன் ஆத்திசூடி, ‘சூழ்நிலை நோக்கு’ என சொல்லித் தருகிறது; வையம் வாழ வாழ் என்றும் போதிக்கிறது. துணிந்து செயல் செய் என்பதுடன் துாற்றுதல் ஒழி என்றும் கற்பிக்கிறது. உலக நீதி, ‘தனம்தேடி உண்ணாமல் புதைக்க வேண்டாம்’ என்கிறது. மாணவர்கள் அறிவுக்கு உகந்த நுால்.
– சீத்தலைச் சாத்தன்