சிறுகதைகள் போல் அமைந்த குறுநாவல்களின் தொகுப்பு நுால். வேகம், விறுவிறுப்பு, தயக்கம், பயம், திகில், ஏக்கம், பக்தியின் தாக்கம், முடிவில் அனைத்தும் சுபம் என்று அமைதியாக படிப்பினை தந்து முடிகின்றன.
வாழ்வியல் உபதேசங்களை, கதை மாந்தர் மூலம் வெளிப்படுத்திக் காட்டியுள்ளது. மாணவர்களுக்கு பாக்கெட் மணி கொடுப்பது, எப்படி எல்லாம் தவறு செய்யத் துாண்டும் என அழகாக சுட்டிக் காட்டுகிறது.
மகனை பத்து மாதம் சுமக்கும் தண்டனையை தான் பெறுகிறாள் தாய்; ஆசிரியரோ, நல்ல மாணவனை உருவாக்க, 15 ஆண்டுகள் அல்லவா மாரடிக்க வேண்டி இருக்கிறது என சொல்லி இருப்பது நிதர்சனம். நாட்டு நடப்புகள் கூறும் நுால்.
– டாக்டர் கார்முகிலோன்