வரலாற்று சிறப்புமிக்க இடங்களின் ரகசியங்கள், சித்தர்களின் ஆத்ம ஞானம் மற்றும் தொன்மையான பாரம்பரிய மர்மங்களை ஆராயும் நுால். ஆழமான ஆன்மிகத் தகவல்கள் இடம்பெற்றுள்ளன. ஆழமான கருத்துகள் எளிய நடையில் உள்ளன.
சித்தர்களின் வழியிலான மெய்யுணர்வு பற்றி விளக்கப்பட்டுள்ளது. பாரம்பரிய ரகசியங்களை ஆராய்ந்து அனுபவத்தை தருகிறது. மர்மம், ஆன்மிகம், வரலாறு மூன்றும் ஒருங்கே கலந்திருக்கின்றன. இறைவனை அறிய ஆர்வமுள்ளோருக்கு வழி காட்டும் விதமாக உள்ளது.
ஆன்மிக பயணம் செய்ய விரும்புவோர் வாசிக்க வேண்டிய கருத்துகள் நிறைந்துள்ளன. சித்தரின் ஆத்ம ஞானம், பாரம்பரிய மருத்துவ தகவல்கள் நிறைந்துள்ளன. சிந்தனையை துாண்டும் ஆன்மிக நுால்.
-– இளங்கோவன்