இயற்கை வழியில் நோய்களை குணப்படுத்தும் ‘ரெய்க்கி’ என்ற சிகிச்சை முறையை அறியத் தரும் நுால். ஜப்பானிய பேராசிரியர் டாக்டர் மிகவோ உருவாக்கிய பயிற்சியை விரிவாக விளக்குகிறது.
இந்த சிகிச்சை முறை அமைதியை தரும்; ஒவ்வாமையை அகற்றும்; நோய்களை குணப்படுத்தும் சக்தியாக உரு பெறும் என விவரிக்கிறது. உடல் சுரப்பிகளோடு தொடர்புடைய மூலாதாரம், ஸ்வாதிஷ்டானம், மணிப்பூரம், அனாகதா, விசுத்தா, ஆக்ஞா, சகஸ்ரம் சக்கரங்களை தொடும்போது நோய்கள் குணமாவதாக கூறுகிறது.
சுய சிகிச்சை நிலை, குணப்படுத்தும் உத்திகள், உடல் திறனை அதிகப்படுத்துவதற்கான வழிமுறைகள், வாழ்வை மாற்றும் பயிற்சி முறைகள் பற்றி கூறப்பட்டுள்ளது. புதிய சிகிச்சை முறையை அறிமுகப்படுத்தும் நுால்.
– புலவர் சு.மதியழகன்