நீதி போதனையை கவிதை வடிவில் சொல்லும் நுால். நல்லவனுக்கும், தீய குணங்கள் நிறைந்தவளுக்கும் பிறந்த குழந்தைகள் பற்றி பேசுகிறது.
குடிப்பழக்கம் ஒருவனிடம் குடிகொண்டால் திருட்டு, காமவெறி, சூது, பொய் சொல்லுதல் போன்ற கொடிய பழக்கங்கள் குடியேறி விடும் என்பதை நீதி போதனையாக உரைக்கிறது. நாட்டில் இன்றைய நடப்பை தெளிவாக எடுத்து சொல்கிறது.
காவல் தெய்வம் கோவில் படியேறி பக்தர்கள் ஆர்ப்பாட்டம் செய்வது அழகாக வர்ணிக்கப்பட்டுள்ளது. ராக்காயி அம்மன் கோவில் ராசியை போற்றி புகழ்கிறது. பிச்சை கூட போடாதவள் பெயர், ‘அன்னம்’ என அழைப்பது நகைப்பை தருகிறது. அவளது குணத்தை இரண்டே வரிகளில் சொல்லி, அவளது பிள்ளைகள் எப்படி கெட்டனர் என்பதையும் சுவைபட விவரிக்கும் நுால்.
– சீத்தலைச்சாத்தன்