முத்தான கட்டுரைகளை தாங்கி நிற்கும் நுால். பரந்துபட்ட அறிவு, மனதில் பதிய, புத்தகங்கள் வாசிக்க வேண்டியதன் அவசியத்தை உணர்த்துகிறது.
சைவ உணவின் மகத்துவத்தை பட்டியலிட்டு வியக்க வைக்கிறது. சைவ உணவு உண்டு, உலக அளவில் சாதனை நிகழ்த்திய பெருமக்கள் விபரங்கள் தரப்பட்டுள்ளன.
கடலில் பெய்த மழையால் என்ன பயன் என்று கேட்பவருக்கு, தகுந்த பதில் புத்தகத்தில் உள்ளது. சமயம், விஞ்ஞானம் பற்றி விஞ்ஞானி ஆல்பர்ட் ஐன்ஸ்டீன் கருத்தை சரியான கோணத்தில் தருகிறது. புத்தகம் வாசிப்பதன் அவசியம் பற்றி சொல்லப்பட்டுள்ள ஒவ்வொரு கருத்தும் வியக்க வைக்கிறது. ஒவ்வொரு வரியையும் ஊன்றிப் படிக்க வேண்டிய உன்னதமான பொக்கிஷமாக விளங்கும் நுால்.
– டாக்டர் கார்முகிலோன்