பூமி வெப்பமயமாதலை மையப்படுத்தி சிறுவர்களுக்காக எழுதப்பட்டுள்ள நாவல். வெப்பமயத்தால் என்னென்ன பாதிப்புகள் ஏற்படும், அவற்றை தடுப்பதற்கு என்ன வழி என்பது போன்ற தகவல்களை உள்ளடக்கியது. கதாபாத்திரங்கள் வாயிலாக கருத்துகள் பகிரப்பட்டுள்ளன.
பள்ளிப்பருவ நாட்களை நினைவூட்டும் வகையிலான நிகழ்வுகள் இதில் கூறப்பட்டுள்ளன. நட்பு, விட்டுக்கொடுத்தல், ஏழ்மை நிலை உள்ளிட்ட பலவற்றை காணலாம். வெப்பமயமாதல் காரணமாக ஒரு குடும்பம் பாதிக்கப்படுவது விளக்கப்பட்டுள்ளது.
வாழ்வில் முன்னேற்றம் ஏற்பட, கல்வி மிகவும் இன்றியமையாதது என்பதை பறைசாற்றும் வகையிலான கருத்துகள் உள்ளன. இயற்கையை காக்க, ஒவ்வொருவரும் ஏதாவது ஒரு வகையில் உதவ வேண்டும் என்ற விழிப்புணர்வை ஏற்படுத்தும் நாவல்.
– முகில்குமரன்