பிராமணீயம் பற்றி விவரிக்கும் நுால். புத்தியில் உறைக்கும் வண்ணம் எழுத்தின் வன்மை, விவேகத்துடன் உள்ளது.
நான்கு வர்ணங்கள் பிறப்பின் அடிப்படையில் ஏற்பட்டவை அல்ல; வாழும் வகையில் ஏற்பட்டது என விவரிக்கப்பட்டுள்ளது. மனித குலத்துக்கே மனு தர்மம் பேசுவதை உரைக்கிறது.
அது குறிப்பிட்ட இனத்தவர் பற்றியது அல்ல என புரிய வைக்கிறது. பகுத்தறிவுவாதிகள், விரோதத்தை கிளப்பி விட்டு குளிர் காய்வதாக விமர்சனத்தை முன் வைக்கிறது.
சுதந்திரத்திற்கு பாடுபட்ட தியாக சீலர்களை பட்டியலிடுகிறது. சங்ககால கபிலர் முதல், அண்மைக்கால கல்கி வரை தமிழ்மொழிக்கு அணிகலன் தந்த பிராமணர்களை பற்றி விவரிக்கிறது. எல்லா இனத்தவரும் படித்து புரிந்து உணர வேண்டிய நுால்.
– சீத்தலைச் சாத்தன்