மகாபாரதத்தில் குறிப்பிட்ட சம்பவங்களை சிறிய கதைகளாக தொகுத்து தரும் நுால்.
துரியோததன் ஏற்பாடு செய்த விருந்தை, படையுடன் உண்டதால், கடமையை விட வாய்மை தான் முக்கியம் என, சல்லியன் வாயிலாக உணர்த்தும் கருத்து மேன்மையானது. பாஞ்சாலி மானம் காத்த கண்ணன், பாண்டவர் சூதாடும் போது ஏன் உதவவில்லை என்பதற்கு தந்துள்ள விளக்கம், அகந்தையை அழிப்பதை சுட்டிக்காட்டுகிறது.
தருமன் கர்வம் அழிந்த விதம், பாஞ்சாலியின் பட்டு சேலை, பக்தியால் கணிகை பெண் பெற்ற மோட்சம் போன்ற சுவையான தகவல்கள் உள்ள நுால்.
– முகில்குமரன்