அறிவியல் கலந்த நாவல் நுால்.
இணைய வெளியின் அதீத முன்னேற்றத்தை அறிந்து இயக்க தெரிந்த கதாபாத்திரம் மாக்கிய வெல்லி. இவன் ஒரு மாயாவி. அடிக்கடி இடம் மாறுபவன். அவனைத் தேடி கண்டடைவது புதிராக காட்டப்பட்டுள்ளது. கால எந்திர கதாபாத்திரங்கள் இதில் இடம் பெறுகின்றன.
மரபணு பண்பு கூறுகளை பயன்படுத்தி, மர்மத்தை உடைத்து சுட்டிக்காட்டுகிறது, உயிரியல் ஆய்வகம். நெபுலாவை இயக்கும் தளபதியாகவும், இணையத்தை ஊடுருவும் உளவாளியாகவும் காட்டுகிறது. நவீன அறிவியல் தொழில் நுட்பத்தைப் பயன்படுத்தி தனித்துவம் பெற்றுள்ள நாவல்.
– ராம.குருநாதன்