விறுவிறுப்புடன் வாசிக்க ஏற்ற குறுநாவல்களின் தொகுப்பு நுால்.
இந்த புத்தகத்தில் வேட்கை, அன்னபூர்ணா, உன் வசம் ஆனேன், ஏழாவது சுவை, இரண்டாவது அத்தியாயம், நான்கு மணி நேரம் ஆகிய தலைப்புகளில் கதைகள் இடம் பெற்றுள்ளனன. இவற்றில், வேட்கை என்ற குறுநாவல் கல்கி பவள விழா போட்டியில் முதல் பரிசு பெற்றுள்ளது. கதைகளில் ஒவ்வொரு பாத்திரமும் தனித்தன்மை வாய்ந்ததாக படைக்கப்பட்டுள்ளன. அன்றாடம் சமூகத்தில் காணும் மனிதர்களின் முகங்களை பிரதிபலிக்கின்றன.
பெரும்பாலும் உரயைாடல்களே கதைகளை நகர்த்தி செல்கின்றன. அவை நுட்பமான அவதானிப்புடன் அமைந்துள்ளன. தேர்ந்த உத்தியை பயன்படுத்தி, எதிர்பாராத திருப்பங்களுடன் கதைகள் சொல்லப்பட்டுள்ளன. வாழும் காலத்தை பிரதிபலிக்கும் குறுநாவல்களின் தொகுப்பு நுால்.
– மதி