பிரபலங்கள் எதிர்கொண்ட உடல் சவால்கள், மனவளர்ச்சி, அடைந்த வெற்றிகளை விளக்கும் மனோபலக் கதைகளின் தொகுப்பு நுால். மருத்துவப் பிரச்னைகள், உயிர் மீட்பு, திருப்புமுனை சம்பவங்கள், மனவலிமையால் வெற்றியை அடைந்த நபர்களின் வாழ்க்கை வரலாறுகள் இடம் பெற்றுள்ளன.
வாழ்க்கை போராட்டங்களை மனவலிமையால் ஜெயிக்க முடியும் என்பதை விளக்கும் விதமாக அமைந்துள்ளது. ஒவ்வொரு கதையும் உந்துசக்தி அளிக்கக் கூடியது. எதிர்பாராத தடைகளை கடந்து உயர்ந்தவர்களின் கதைகள் அடங்கியுள்ளன. ஒவ்வொரு நபரின் வாழ்க்கைச் சவால்கள், அவர்களின் மனதை வளர்த்த விதம் சிறப்பாக விவரிக்கப்பட்டுள்ளன. தன்னம்பிக்கை, விடாமுயற்சியை துாண்டும் நுால்.
– இளங்கோவன்