சிறுவர், சிறுமியருக்கு அறிவூட்டும் சிறுகதைகளின் தொகுப்பு நுால். விலங்குகளை கதாபாத்திரங்களாக கொண்டு நீதிபோதனை செய்யும் வகையில் உள்ளது.
தொகுப்பில், 16 கதைகள் இடம் பெற்றுள்ளன. காட்டு சூழல் சார்ந்து கதைகள் இடம் பெற்றுள்ளன. விலங்குகளே அரிய பாத்திரங்களாக உருவாகி கதைகளை நகர்த்துவதால் சுவாரசியத்துக்கு பஞ்சமில்லை. கலகலப்பாக வாசிப்பை துாண்டும் வகையில் எளிய நடையில் அமைக்கப்பட்டுள்ளன.
ஒவ்வொரு கதையுடனும் கவரும் வண்ணம் வரைபடங்கள் இடம் பெற்றுள்ளன. கல்வியின் உயர்வை சில உணர்த்துகின்றன. சமூகத்தில் இணக்கமாக வாழும் சூழலை சொல்லும் கருத்தோட்டங்கள் கவரும் வண்ணம் உள்ளன. அறிவை புகட்டும் வகையில் சுவையான சிறுவர் கதைகளின் தொகுப்பாக மலர்ந்துள்ள நுால்.
– ராம்